ADDED : டிச 15, 2024 06:14 AM
புதுச்சேரி: டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிர்மல் சிங் மனைவி மேனகா,30; டாக்டர். தனியாக கிளினிக் வைத்துள்ளார். இவர், கடந்த 12ம் தேதி, கார்த்திகை தீபத்திற்கு பொருட்கள் வாங்க, அம்பலத்தடையார் வீதியில், தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். அவ்வழியாக காரை ஓட்டி வந்தவர், அவரை அவதுாறாக பேசினார். காரை மறித்து, எப்படி என்னை திட்டலாம் என, மேனகா கேட்டார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், மேனகாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்ததில், மேனகாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தது முத்தியால்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.