/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத்துறைக்கு நிரந்தர செயலரை நியமிக்க கோரிக்கை
/
சுகாதாரத்துறைக்கு நிரந்தர செயலரை நியமிக்க கோரிக்கை
சுகாதாரத்துறைக்கு நிரந்தர செயலரை நியமிக்க கோரிக்கை
சுகாதாரத்துறைக்கு நிரந்தர செயலரை நியமிக்க கோரிக்கை
ADDED : டிச 10, 2024 06:34 AM
புதுச்சேரி: சுகாதாரத் துறையில் கொள்கை முடிவுகளை செயல்படுத்த, நிரந்தர அரசு செயலரை நியமிக்க சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சம்மேளன பொதுச் செயலாளர் ஜவஹர் அறிக்கை:
சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன கோரிக்கையை ஏற்று இயக்குநர் பதவியை நிரப்ப நடவடிக்கை எடுத்த கவர்னர், முதல்வர், தலைமை செயலர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களின் சுகாதாரம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த கொள்கை முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் சுகாதார செயலர் பதவி ஆகும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக சுகாதாரத் துறைக்கு நிலையான செயலர் நியமிக்கப்படாததால், ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் உள்ளது.
சுகாதாரத் துறையில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய செயலரை, ஓரே இடத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்காமல், அடிக்கடி இடமாற்றம் செய்வதால், ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் மக்களின் சுகாதாரம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் முடங்கி உள்ளது.
மேலும், சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல முக்கிய பதவிகளை நிரப்ப முடியாத சூழல் நிலவி வருகிறது.
எனவே, கொள்கை முடிவுகளை செயல்படுத்த வேண்டிய சுகாதார செயலர் பதவியை, இணைப்பு முறையில் இல்லாமல், நிரந்தரமாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

