UPDATED : அக் 11, 2026 06:42 PM
ADDED : அக் 11, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: நல்லுார் ஏரியில் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருபுவனை அடுத்த நல்லுார் ஏரியில் சமீபத்தில் பெய்த மழையால் குறிப்பிட்ட அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் ஏரிக்கு அதிகளவு பறவைகள் தினமும் இரை தேட வருகின்றன.
இந்நிலையில் ஏரிக்கு வரும் பரவைகளை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு, வேட்டையாடுவது தொடர்கிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
