UPDATED : அக் 11, 2026 06:49 PM
ADDED : அக் 11, 2026 06:17 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: திருக்கனுார் பகுதியில் ஆடு திருடி சென்ற கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனுார் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் ஆடுகளை திருடி வருகின்றனர். புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா உதவியுடன் ஆடுகள் திருடி நபர்களை தேடி வந்தனர்.
நேற்று அதிகாலை ஒரு கும்பல் ஆடுகளை திருடி செல்வது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள், கொடத்துார், மணவெளி பகுதிகளில் இருந்து ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. அந்த கும்பலிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
