தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனியாக வசித்த பெண் சாவு: போலீசார் விசாரணை

தனியாக வசித்த பெண் சாவு: போலீசார் விசாரணை

தனியாக வசித்த பெண் சாவு: போலீசார் விசாரணை


UPDATED : அக் 11, 2026 06:48 PM

ADDED : அக் 11, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 06:48 PM ADDED : அக் 11, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, கார்கல் மடத்தை சேர்ந்தவர் புகழேந்தி; வியாபாரி. கணபதி செட்டிகுளம், வடக்கு தெருவில் உள்ள இவரது வீட்டின் முதல் மாடியில், செல்வராஜ் மனைவி உமா, 55, என்பவர், வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் அந்த வீட்டின் எதிரே குடியிருந்து வரும் மனோஜ், புகழேந்தியை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, உமா வசித்து வரும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, புகழேந்தி காலாப்பட்டு போலீசாருடன் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, உமா உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து, உமா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். புகழேந்தி புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us