நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வெனிசுலாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்து புதுச்சேரி இணைப்பு சங்கங்கள் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் அண்ணா சாலை ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் நடந்தது.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் அந்தோணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி., கவுரவ தலைவர் அபிஷேகம், சந்திரசேகரன், மோதிலால், சேகர், மூர்த்தி, சி.ஐ.டி.யூ., மதிவாணன், மணிபாலன், மாநில செயலாளர் புருஷோத்தமன், அருள், குமார், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில செயலாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரின் மனைவி சிலியாபுளோராவை விடுவிக்க கோரியும், அமெரிக்க படைகள் வெளியேற வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

