தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டெங்கு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்

டெங்கு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்

டெங்கு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுாரில் காய்ச்சல், டெங்கு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

வில்லியனுார் செந்தில் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமைத் துவக்கி வைத்தார். டாக்டர் மணிகண்ட ஜோதி தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள் சாதாரண காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.

மேலும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடல் சோர்வு, பசியின்மை உள்ளிட்ட காய்ச்சல் அறிகுறிகளையும், திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, தசை மற்றும் மூட்டு வலி, தோலில் தடிப்புகள் உள்ளிட்ட டெங்கு அறிகுறிகள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், என்.ஆர்.காங்., சத்தியமூர்த்தி, ராமதாஸ் மற்றும் சமூக நல அமைப்பினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us