UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:18 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஓட்டுப்பதிவுஇயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாக்கமுடையான்பட்டு பூத்தில் , துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. அதையொட்டி, தொகுதியில் உள்ள மொத்தம் 31 பூத்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையான்பட்டு அரசு கிளை நுாலகம் பூத்தில், ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்டு மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
