ADDED : டிச 13, 2025 05:36 AM

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், முத்திரையர்பாளையம் ஆயி அம்மாள் அரசு நடுநிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சரோஜினி தலைமை தாங்கினார். உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், மேட்டுப் பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி சரண்யா, நகராட்சி சுகாதார அதிகாரி ராஜா ஆகியோர், டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்துவது, டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புக்கள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். டெங்கு நோய் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது . மாணவர்க ள் விழிப்புணர்வு ஊர்வலத்தை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மாணவர்கள், பொதுமக்களிடம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தி னர்.
ஏற்பாடுகளை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஜீவா, சுகாதார ஆய்வாளர் முனுசாமி, சுகாதார உதவி ஆய்வாளர்கள் கோபி, நிஷா, சரவணராஜ், ராஜவேலு, ஜெயஸ்ரீ, ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ், செந்தில், ஆஷா ஊழியர்கள் கவிதா, விஜயா ஆகியோர் செய்திருந்தனர்.

