/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் அச்சம் அடைய வேண்டாம்: கலெக்டர்
/
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் அச்சம் அடைய வேண்டாம்: கலெக்டர்
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் அச்சம் அடைய வேண்டாம்: கலெக்டர்
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் அச்சம் அடைய வேண்டாம்: கலெக்டர்
ADDED : டிச 13, 2025 05:14 AM
புதுச்சேரி: வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் அச்சம் அடைய வேண்டாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி, கலெக்டர் குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 28 ம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி துவங்கப்பட்டது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து, பூர்த்தி செய்து திரும்ப பெற்றனர் .
இப்பணி கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்தது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வின்போது, சில வாக்காளர்களின் வீடுகள் பூட்டப்பட்டிருந்தது, வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தது, மரணம் அடைந்தது போன்ற காரணங்களால் படிவங்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
வக்காளர் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது. மேற்கூறிய வாக்காளர்களின் பெயர்கள் வரும் 16ம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.
தகுதியுடைய வாக்காளரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருக்கவும், தகுதியற்ற வாக்காளர்களின் பெயரை நீக்கும் பொருட்டு, வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து கருத்து தெரிவிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 16ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படும். ஆகையால், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் தகுதியுடையவராக இருப்பின் அவர்கள் பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.
இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

