ADDED : டிச 13, 2025 05:15 AM
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் நீதிமன்றங்களில் இன்று மக்கள் நீதி மன்றம் நடக்கிறது.
புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியான அம்பிகா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவர் ரமேஷ் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (13ம் தேதி) காலை 10:00 மணியளவில் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. அதே போன்று, காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், ஏனாம் நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் இன்று காலை 10:00 மணியளவில் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில், நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளும், எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது.
மேலும், சமாதானக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தீர்வு காணப்பட உள்ளது.

