/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய காரத்தே போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் போபால் பயணம்
/
தேசிய காரத்தே போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் போபால் பயணம்
தேசிய காரத்தே போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் போபால் பயணம்
தேசிய காரத்தே போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் போபால் பயணம்
ADDED : டிச 13, 2025 05:33 AM

புதுச்சேரி: தேசிய அளவிலான காரத்தே போட்டியில் பங்கேற்க புதுச்சேரி அணியினை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான காரத்தே போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வரும் 14 முதல் 19ம் தேதி வரை நடக்கிறது.
புதுச்சேரி கல்வி துறை சார்பில், இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் கொண்ட புதுச்சேரி அணி உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார், உடற்கல்வி ஆசிரியர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் புறப்பட்டு சென்றனர்.
இவர்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி ரயில் நிலையத்தில் நடந்தது. புதுச்சேரி மாநில கராத்தே சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுந்தர்ராஜன், துணை தலைவர் மதிஒளி, சேர்மன் ஆளவந்தார், சீனியர் பயிற்சியாளர் திருநாவுக்கரசு, காரைக்கால் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய கராத்தே சங்க தலைவர் வளவன், மாணவ மாணவிகளை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். கராத்தே பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.