/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
பாகூரில் மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பாகூரில் மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பாகூரில் மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : பிப் 21, 2024 11:15 PM

பாகூர் : பாகூரில் 1 கோடியே 32 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை சிறப்பு கட்டடப் பிரிவு சார்பில், 49.94 லட்ச ரூபாய் மதிப்பில், பாகூர் பேட் அரசு ஆரம்ப பள்ளியின் கட்டடம் மற்றும் கழிவறை புனரமைப்பு, மதில் சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, கல்வித் துறை பள்ளி துணை ஆய்வாளர் லிங்குசாமி, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், தலைமை ஆசிரியர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பாகூரில் உள்விளையாட்டு அரங்கத்திற்கு 40.72 லட்ச ரூபாய் மதிப்பில் மரத்தாலான தரை தளம் அமைக்கும் பணி, குருவிநத்தம் பெரியார் நகர் - வாழப்பட்டு பஸ் நிறுத்த சந்திப்பு வரையில் 42.26 லட்ச ரூபாயில் 'U' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி ஆகியவற்றை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கல்வித்துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நல துணை இயக்குனர் வைத்தியநாதன், பொறுப்பாளர் ஆனந்தன், உதவி பொறியாளர் தனசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.