/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்பாக்கியுடன் ரோந்து பணி டி.ஐ.ஜி., உத்தரவு
/
துப்பாக்கியுடன் ரோந்து பணி டி.ஐ.ஜி., உத்தரவு
ADDED : அக் 29, 2025 07:26 AM
புதுச்சேரி: ரோந்து செல்லும் போலீஸ் அதிகாரிகள், துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் என, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும், சட்டம், ஒழுங்கை சிறப்பான முறையில், பராமரிக்கும் வகையில், முக்கிய சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து, வாகன சோதனை நடத்த வேண்டும்.
போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அதிகாரிகள், தினந்தோறும் மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ஒரு இடத்தில் சோதனை நடத்தும் அதிகாரிகள், 2 மணி நேரத்திற்கு பிறகு அடுத்த இடத்தில் சோதனை செய்ய வேண்டும்.
ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகள், துப்பாக்கியுடன் செல்ல வேண்டும். இந்த பணியில் ஈடுபடும் அதிகாரிகளை, எஸ்.பி.,க்கள் கண்காணிக்க வேண்டும். கூடுதலாக போலீசார் தேவைப்பட்டால், ஆயுதப்படை, ரிசர்வ் பட்டாலியன், கமாண்டோ படையினரை பயன்படுத்தி கொள்ளலாம்.

