sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜிவ் மேம்பாலத்தில் காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை... புறக்கணிப்பு; தொலைநோக்கு பார்வையில்லை என குற்றச்சாட்டு

/

ராஜிவ் மேம்பாலத்தில் காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை... புறக்கணிப்பு; தொலைநோக்கு பார்வையில்லை என குற்றச்சாட்டு

ராஜிவ் மேம்பாலத்தில் காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை... புறக்கணிப்பு; தொலைநோக்கு பார்வையில்லை என குற்றச்சாட்டு

ராஜிவ் மேம்பாலத்தில் காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை... புறக்கணிப்பு; தொலைநோக்கு பார்வையில்லை என குற்றச்சாட்டு


ADDED : அக் 29, 2025 07:41 AM

Google News

ADDED : அக் 29, 2025 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராஜிவ் சிக்னலில் நெரிசலில் திணறும் இரு பிரதான சாலைகளை தவிர்த்துவிட்டு, மேம்பால திட்டத்தைஅமைக்க இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்களுக்கு இடையே ரூ.436 கோடி செலவில் உயர்மட்ட மேம்பால திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிக்னல்களில் நெரிசலில் தினமும் விழிபிதுங்கி செல்லும் நகர மக்களுக்கு இது நிம்மதி அளித்தாலும், ராஜிவ் சிக்னலில் இரண்டு பிரதான சாலைகளை தவிர்த்துவிட்டு மேம்பாலங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திரா சிக்னலில் கிழக்கு-மேற்காக மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மார்க்கத்தில் ஜவகர் நகரில் மேம்பாலத்தில் ஏறினால் நேரடியாக புது பஸ் ஸ்டாண்ட்டை நோக்கி சென்று விடலாம்.

அப்படி பார்த்தால், ராஜிவ் சிக்னலில் கிழக்கு-மேற்காக கோரிமேடு ரோடு, காமராஜர் சாலை, வழுதாவூர் சாலையில் மேம்பாலம் இணைத்து இறக்கி திட்டத்தை தீட்டி இருக்க வேண்டும். ஆனால் மேம்பால திட்டத்தில் கோரிமேடு வழித்தடம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால், போக்குவரத்து நெரிசலில் தினமும் திணறிக்கொண்டிருக்கும் காமராஜர் சாலையும், வழுதாவூர் சாலையும் விடுபட்டிருப்பது மர்மமாக உள்ளது.

மத்திய சாலை அமைச்சகம் இந்த சாலைகளில் மேம்பாலம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாதா அல்லது மாநில அரசு வேண்டாம் என தவிர்த்துவிட்டதா... யாருடைய கட்டடங்களை காப்பாற்ற இந்த சாலைகளில் மேம்பாலங்கள் கைவிடப்பட்டதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ராஜிவ் சிக்னலில் மேம்பாலம் அமைத்த பிறகு 55 சதவீதம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். காமராஜர் சாலை, வழுதாவூர் சாலையில் வாகனங்கள் செல்ல பிரச்னை இருக்காது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் சப்பை கட்டு கட்டுகின்றனர்.

உண்மையில், மேம்பால பிளான் போட்டவர்கள் இதுவரை காமராஜர் சாலை, வழுதாவூர் சாலையை நேரில் சென்று பார்த்ததே கிடையாது என்றே நினைக்க தோன்றுகின்றது. புதுச்சேரியின் 'ஹார்ட் ஆப் தி சிட்டி'க்கு செல்ல காமராஜர் சாலை தான் பிரதான ரோடு. கர்நாடாக, சென்னை உள்ளிட்ட வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் காமராஜர் சாலை வழியாக தான் கடற்கரை சாலைக்கு செல்கின்றனர்.

அப்படி இருக்கும் போது, தொலை நோக்கு பார்வையுடன் காமராஜர் சாலையில் பாலாஜி தியேட்டர் வரை மேம்பாலத்தை கொண்டு வந்து உப்பனாறு வாய்க்காலில் புது பாலத்துடன் இணைத்திருக்க வேண்டும்.

இப்படி செய்திருந்தால் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் வாகனங்களையும், ராஜா தியேட்டரில் இருந்து வெளியேறும் வாகனங்களையும் நேரடியாக ராஜிவ் சிக்னல் வரை கொண்டு சென்று வழியனுப்பி இருக்கலாம். இதனால் நெரிசலில் ஸ்தம்பிக்கும் காமராஜர் சாலைக்கும் விடிவுகாலம் பிறந்திருக்கும். ஆனால் அதனை செய்யாமல் காமராஜர் சாலையை மேம்பால திட்டத்தில் புறக்கணித்தது ஏன். இந்த முடிவை எடுத்தது யார்?

இதேபோல், புதுச்சேரியின் புறநகர் சாலையில் மிகவும் ஆபத்தான நெரிசலான சாலை ஒன்று உண்டு என்றால், அது வழுதாவூர் சாலை தான். ரொம்ப குறுகிய வழுதாவூர் சாலை வி.ஐ.பி.., சாலையாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் கடப்பது என்பது பெரிய சவால். சிக்னலை கடக்கவே, சில நேரங்களில் வழுதாவூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் படுமோசம். இந்த வழியாக தன் தினமும் முதல்வர், கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் சென்று வருகின்றனர். அவர்களிடம் கேட்டிருந்தால் கூட போக்குவரத்து நெரிசலின் கொடுமையை சொல்லி இருப்பார்கள்.

அப்படி இருக்கும்போது இந்த பிரதான சாலையை மேம்பால திட்டத்தில் இணைக்காமல் புறக்கணித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு அத்தி பூத்தாற்போல் பெரிய மேம்பால திட்டம் கிடைத்துள்ளது.

இதில் அனைத்து போக்குவரத்து மிகுந்த நெரிசல் சாலைகளையும் இணைத்தால் புதுச்சேரி எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க முடியும்.

எனவே மேம்பால திட்டத்தில் விடுபட்ட காமராஜ் சாலையும், வாழுதாவூர் சாலையையும் இணைக்க மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு ஏற்காவிட்டால், மாநில அரசே நிதி ஒதுக்கி இரு சாலைகளையும் மேம்பாலத்துடன் இணைக்க வேண்டும். இலவசத்தை காட்டிலும் இது போன்ற உட்கட்டமைப்பைதான் புதுச்சேரி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us