தினமலர் செய்தி எதிரொலி வாய்க்கால் சிலாப் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி வாய்க்கால் சிலாப் சீரமைப்பு
UPDATED : நவ 17, 2026 07:54 PM
ADDED : நவ 17, 2026 07:52 PM

புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலி காரணமாக பாக்கமுடையான்பட்டு சாலையில் விபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்த சிமென்ட் சிலாப்பை பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர்.
பாக்கமுடையான்பட்டு அரசு கிளை நுாலகம் அருகில், ஏர்போர்ட் சாலை திரும்பு பகுதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் இருந்த சிமென்ட் சிலாப் சேதமடைந்து, விபத்து ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருந்தது.
இந்நிலையில், தினமலர் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் லோகநாதன் உத்தரவின்பேரில், ஊழியர் சங்கர் மற்றும் ஊழியர்கள் சேதமடைந்த சிலாப்பை சிமென்ட் கலவை மூலம் சீரமைத்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்து கொக்குபார்க் சாலையில் இருந்த பள்ளங்களையும் சீரமைத்தனர்.
