தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாவட்ட அளவிலான தடகள போட்டி பரிசளிப்பு

மாவட்ட அளவிலான தடகள போட்டி பரிசளிப்பு

மாவட்ட அளவிலான தடகள போட்டி பரிசளிப்பு


UPDATED : அக் 14, 2026 07:29 PM

ADDED : அக் 14, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:29 PM ADDED : அக் 14, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தடகள சங்கத்தின் கீழ் இயங்கும் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாணவர்களுக்கான 20வது மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.

வீராம்பட்டினம், ஜே.பி. பவுண்டேஷன் விளையாட்டு வளாகத்தில் நடந்த போட்டிகளில் 12, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியினை புதுச்சேரி தடகள சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் மற்றும் செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். வட்டார தடகள சங்கத்தின் தலைவர் தமிழப்பன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ரகுராமன் வரவேற்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜே.பி. பவுண்டேஷன் தலைவர் பிரேம் நாதன், டேனியல் மற்றும் வீராம்பட்டினம் மக்கள் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் கோப், பிரேம்குமார், முருகன் மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர். பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us