தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தீபாவளி சிறப்பு மளிகை தொப்புகளை 25க்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

தீபாவளி சிறப்பு மளிகை தொப்புகளை 25க்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

தீபாவளி சிறப்பு மளிகை தொப்புகளை 25க்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்


UPDATED : நவ 18, 2026 07:16 PM

ADDED : நவ 18, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 07:16 PM ADDED : நவ 18, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளி சிறப்பு மளிகை தொப்புகளை, வரும் 25ம் தேதிக்குள், தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்கள், அந்தந்த ரேஷன் கடைகளின் மூலமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என, அமைச்சர் சிவக்கொழுந்து கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

புதுச்சேரி அரசு சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் மூலம் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஐந்து வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய, சிறப்புத் தொகுப்பு ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகுப்பில், 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப் பருப்பு, 500 கிராம் ரவை மற்றும் 500 கிராம் மைதா ஆகிய ஐந்து வகையான மளிகைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இதுவரை இத்தொகுப்பினைப் பெறாத தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள், தங்களது பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்று வரும் 25ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சிவக்கொழுந்து கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அரசு வழங்கும் இச்சிறப்புத் திட்டத்தின் பயனைத் தகுதியுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் முழுமையாகப் பெற்றுப் பயனடைய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us