UPDATED : நவ 18, 2026 05:56 PM
ADDED : நவ 18, 2026 05:56 PM

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த, மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார்.
டில்லி சென்றுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மத்திய சுற்றுலா மற்றும் காலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ெஷகாவத்தை சந்திந்து பேசினார்.
அப்போது புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் ‘ஒரு மாநிலம்–ஒரு உலகத்தர சுற்றுலாத்தலம்’ திட்டத்தின் கீழ் விரிவான திட்ட முன்மொழிவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இத்திட்டத்திற்காக மத்திய அரசு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, வலியுறுத்தினார். இது தவிர புதுச்சேரி தொடர்பான பல்வேறு நிலுவை பிரச்னைகள், மேற்கொள்ளவேண்டிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மத்திய அரசிடமிருந்து பெறப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் மத்தியமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.
