/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜ.ஜி., வாழ்த்து
/
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜ.ஜி., வாழ்த்து
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜ.ஜி., வாழ்த்து
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜ.ஜி., வாழ்த்து
ADDED : நவ 01, 2024 05:42 AM

புதுச்சேரி: பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
காவல் பணி என்பது கடுமையான பணி. தீபாவளி, பொங்கல் என்று எந்த விசேஷங்களுக்கு விடுமுறை கிடைக்காது. புதுச்சேரியில் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட சூழ்நிலையில் சிக்னல்களில், முக்கிய சாலைகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமல், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தினர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள், மாணவர்களை டி.ஐ.ஜி., சண்முகசுந்திரம் நேற்று இனிப்பு கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அவர்களது பணியை பாராட்டினார்.