/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி'
/
'பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி'
ADDED : பிப் 13, 2025 04:52 AM
புதுச்சேரி: சட்டசபையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நேரு எம்.எல்.ஏ., கூறியதாவது;
சபாநாயரை எதிர்த்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதம் கொடுத்ததுடன், சபையில் சபாநாயகர் கண்டித்து தர்ணா செய்தேன். இதனை முறியடிக்க எதிர்க்கட்சியான தி.மு.க., பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் வந்துவிட கூடாது என்பதிலும் தி.மு.க., உறுதியாக இருந்தது. புதுச்சேரியில் பா.ஜ.,வுக்கு தி.மு.க., வெளிப்படையான கூட்டணி வைத்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போராட்டம் நடத்திய என்னை சஸ்பெண்ட் செய்தனர். தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்த பின்பு, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள் என அவர்களுக்குள் பா.ஜ., தி.மு.க., பேசி வைத்து நாடகம் நடத்தி உள்ளனர்' என்றார்.

