/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., கலை, இலக்கிய பேரவையின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., கலை, இலக்கிய பேரவையின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., கலை, இலக்கிய பேரவையின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., கலை, இலக்கிய பேரவையின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 12, 2024 07:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பேரவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராஜேஷ், துணை அமைப்பாளர்கள் தியாகராஜன், உத்திராபதி, தேசிங்கு, அன்புமாறன், ஏழுமலை கலந்து கொண்டனர்.
மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க., நூற்றாண்டு விழா மற்றும் பவள விழாவை முன்னிட்டு, பேரவை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
2026-ல் தமிழக திராவிட மாடல் ஆட்சியை புதுச்சேரியில் அமைத்திட பங்காற்றுவது என்றும், பவள விழா பொதுக்கூட்டத்தை அரியாங்குப்பத்தில் நடத்தவும், மேலும் 27-ம் தேதி தமிழக துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கலை, இலக்கிய பேரவை சார்பில் கொண்டாடுவது என்றும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.