ADDED : ஜூலை 13, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதி சின்ன பொய்கை கிளை கூட்டம், தொகுதி தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.
தொகுதி பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சாலமன் வரவேற்றார். மாநிலக் துணை அமைப்பாளர் தைரியநாதன் துவக்க உரையாற்றினார். தொகுதி செயலாளர் சக்திவேல் சிறப்புரையாற்றினார். தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் பேசுகையில், 'வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சின்ன பொய்கை பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க உதவிகள் செய்யப்படும். அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்' என்றார்.
தொகுதி பொருளாளர் சசிகுமார், நிர்வாகிகள் ரங்கசாமி, சண்முகம், அல்லி தாமரை உட்பட பலர் பங்கேற்றனர்.