/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பற்றி பேச தி.மு.க., - காங்.,க்கு தகுதி இல்லை¶'
/
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பற்றி பேச தி.மு.க., - காங்.,க்கு தகுதி இல்லை¶'
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பற்றி பேச தி.மு.க., - காங்.,க்கு தகுதி இல்லை¶'
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பற்றி பேச தி.மு.க., - காங்.,க்கு தகுதி இல்லை¶'
ADDED : ஏப் 14, 2025 04:20 AM
புதுச்சேரி:அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பற்றி பேச தி.மு.க., - காங்.,க்கு தகுதி இல்லை என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஜாதி, மத, மொழி ரீதியாக மக்களின் உணர்வுகளை துாண்டி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் தி.மு.க., தலைமையிலான இந்தியா கூட்டணியை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற, தேசிய சிந்தனையுடைய அ.தி.மு.க., தலைமையில் பா.ஜ., கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி அமைந்தவுடன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் பயத்தில் பிதற்றி வருகின்றனர்.புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் எங்களது கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சாபம் இடுகிறார்.
நாட்டு மக்களின் நலனுக்காக ஜாதி, மதம், மொழி ரீதியாக மக்களை பிரிக்கும் மதவாத கட்சிகளான தி.மு.க., - காங்., - கம்யூ., - வி.சி., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு சரியான பாடத்தை அமைக்கும் ஒரு தேசிய சிந்தனையுள்ள கூட்டணியான அ.தி.மு.க., - பா.ஜ., - என்.ஆர்.காங்., ஆகியவற்றை குறை கூற எதிர்க்கட்சிகள் யாருக்கும் தகுதி இல்லை.
நாராயணசாமிக்கு நாவடக்கம் வேண்டும். தமிழகத்தில் அமைச்சர் பதவிகளில் இருந்து கொண்டு இந்துமத கடவுள்களையும், இந்து மத பெண்களையும் வாய் கூசும் அளவிற்கு விமர்சனம் செய்த அமைச்சர் பொன்முடியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

