/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஜெகத்ரட்சகன் எம்.பி.,துவக்கி வைப்பு
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஜெகத்ரட்சகன் எம்.பி.,துவக்கி வைப்பு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஜெகத்ரட்சகன் எம்.பி.,துவக்கி வைப்பு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஜெகத்ரட்சகன் எம்.பி.,துவக்கி வைப்பு
ADDED : அக் 07, 2025 01:12 AM

புதுச்சேரி,; புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் 'உடன்பிறப்பே வா' பரப்புரையின் கீழ் உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா முத்தியால்பேட்டை தொகுதியில் நேற்று நடந்தது.
விழாவில், ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பங்கேற்று, உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார்.
காரைக்கால் மாவட்ட செயலாளர் நாஜிம், அவைத்தலைவர் சிவக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா. சரவணன், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், தொகுதி செயலாளர்கள் சவுரிராஜன், சக்திவேல், திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், கோபால், முன்னாள் சபாநாயகர் பழநிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, உப்பளம், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை தொகுதிகளில் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டது.