/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி தி.மு.க., எதிர்ப்பு
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி தி.மு.க., எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் திருத்த பணி தி.மு.க., எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் திருத்த பணி தி.மு.க., எதிர்ப்பு
ADDED : அக் 29, 2025 06:45 AM

புதுச்சேரி: பருவ மழை காலத்தில், புதுச்சேரியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொள்ள தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துணை தலைமைத் தேர்தல் அதிகாரி தில்லைவேலிடம், தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில், அவைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அளித்த மனு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நவ.,- டிச., மாதங்களில் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அவசர கதியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நடைமுறைச் சாத்தியம் இல்லாத வடகிழக்கு பருவமழை காலத்தில் வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொள்வது என்பது வாக்காளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். வாக்காளர் பட்டியல் சீரமைக்க வேண்டும் என்பதை தி.மு.க., மறுக்கவில்லை. ஆனால், அதனை அவசர கதியில் செய்யக்கூடாது.
அடுத்தாண்டு ஏப்., மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு, இப்போது செய்ய துவங்குவதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இது தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக எடுத்த முடிவாக தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சமீபகாலமாக சர்ச்சைக்குரியதாக உள்ளன.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கிறது.

