/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்நடைகளுடன் காங்., ஆர்ப்பாட்டம்
/
கால்நடைகளுடன் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 29, 2025 06:48 AM

புதுச்சேரி: கால்நடைத்துறையில், ஊழலை கண்டித்து, காங்., விவசாய அணி சார்பில், ஆடு, மாடு, கோழியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கால்நடை துறையில், கறவை மாடு, வெள்ளாடு வளர்ப்பு திட்டத்தில் ஊழலை கண்டித்து, சுதேசி மில் அருகில் காங்., விவசாயி அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில விவசாய அணி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பந்தலில் ஆடு, மாடு, கன்று குட்டி, கோழிகளை கட்டி வைத்து, போராட்டம் நடத்தினர்.
பின், வைத்திலிங்கம் எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், ஒரு மாட்டை காட்டி, 10 லோன் வாங்கி, முறைகேடு செய்துள்ளனர். கூட்டுறவு, கால்நடை துறையும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள்.
இளைஞர்கள், பால் பண்ணை வைக்க வேண்டும் என கூறிய, முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு மாடுகளை கொடுக்கவில்லை. மாடு கொடுத்திருந்தால் பால் உற்பத்தி அதிகமாகி இருந்திருக்கும்.
அரசு விழாவில், எம்.எல்.ஏ., போராட்டம் நடத்துகிறார். குறைகளை தீர்க்க முடியவில்லை என்றால், முதல்வர் பதவியை, ராஜினமா செய்ய வேண்டும்' என்றார்.

