/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் வேலை கேட்டு 8ம் தேதி தி.மு.க., போராட்டம்
/
ஜிப்மரில் வேலை கேட்டு 8ம் தேதி தி.மு.க., போராட்டம்
ஜிப்மரில் வேலை கேட்டு 8ம் தேதி தி.மு.க., போராட்டம்
ஜிப்மரில் வேலை கேட்டு 8ம் தேதி தி.மு.க., போராட்டம்
ADDED : ஆக 06, 2025 08:50 AM

புதுச்சேரி : ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து வரும் 8 ம் தேதி தி.மு.க., சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா விடுத்துள்ள அறிக்கை:
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பில் உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். 'சி' பிரிவு பணியாட்களை ஒப்பந்த முறையில், பணம் பெற்று கொண்டு சேர்க்கின்றனர். ஜிப்மரின் தன்னிச்சை செயலால் பொது சுகாதாரம், வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்கள் பாதிக்கின்றனர்.
கைவிடப்பட்ட சிகிச்சைக்கு கட்டண முறை மீண்டும் அமல்படுத்துவதை நிறுத்தி மீண்டும் இலவச மருத்துவ சேவை மீண்டும் தொடர வேண்டும்.
ஜிப்மரில் காலியாக உள்ள 454 செவிலியர் பணியிடங்களுக்கு சுயமாக தேர்வு நடத்தாமல், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் நுழைவு தேர்வு நடத்துகின்றனர். இதனால், வெளிமாநிலத்தவர்கள் வேலை பெறும் நிலையுள்ளது.
ஜிப்மர் நிர்வாகத்தின் இச்செயலை கண்டித்தும், வேலைவாய்ப்பளிக்கும் தேர்வை ஜிப்மர் நிர்வாகமே நடத்த வேண்டும். தற்போது அறிவித்துள்ள செவிலியர் மற்றும் குரூப் பி, சி, பணியிடங்கள், புதுச்சேரி மாநிலத்தவருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் 8 ம் தேதி தி.மு.க., சார்பில் மக்கள் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.