/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாக்டர்களின் பைக்குகள் திருட்டு
/
டாக்டர்களின் பைக்குகள் திருட்டு
ADDED : பிப் 17, 2024 11:26 PM
திருபுவனை: திருபுவனை அருகே தனியார் மருத்துவக் கல்லுாரி டாக்டர்களின் பைக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ராஜிவ் சதுக்கம், காமராஜர் நகரை சேர்ந்தவர் கருணாநிதி மகன் டாக்டர் கவுஷிக், 26; கலிதீர்த்தாள்குப்பம் ராமக்கிருஷ்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கி, அருகில் உள்ள மணக்குள வினாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
கடந்த 14ம் தேதி இரவு, வீட்டின் முன் நிறுத்தியிருந்த கேடிஎம் டியூக் பைக்கை (பி.ஒய் 05 எப்.6400) மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மற்றொரு பைக் திருட்டு
அதபோல், புதுச்சேரி லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் 8வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் மகன் அஷ்வந்த்குமார், 24; இவர் கலிதீர்த்தாள்குப்பம் சுப்ரமணிய நகரில் வாடகை வீட்டில் தங்கி, மணக்குள வினாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.டி., (பொது மருத்துவம்) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது யமாகா பைக்கை (பி.ஒய்.05 எச் 9943) கடந்த 15ம் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்த புகார்களின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து, பைக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.