தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனகருவி விநியோகஸ்தர்கள் - விவசாயிகள் சந்திப்பு

சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனகருவி விநியோகஸ்தர்கள் - விவசாயிகள் சந்திப்பு

சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனகருவி விநியோகஸ்தர்கள் - விவசாயிகள் சந்திப்பு


UPDATED : அக் 28, 2026 04:16 AM

ADDED : அக் 27, 2026 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 04:16 AM ADDED : அக் 27, 2026 08:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பகுதி விவசாயிகளுடன் சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன கருவி அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் 'துளி நீரில் அதிக சாகுபடி' திட்டத்தின் கீழ், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 90 சதவீத மானியமும் அரசால் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கட்டமைப்புகளை அமைப்பது மற்றும் மானியம் தொடர்பான விவசாயிகள் மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட பாசனக் கருவி விநியோகஸ்தர்கள் இடையேயான நேரடி சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தட்டாஞ்சாவடி வேளாண் வளாகத்தில் உள்ள உழவர் பயிற்சிக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், வேளாண் பொறியியல் பிரிவு துணை இயக்குநர் ஜெயக்குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, சந்திரகலா, சிவராமன் மற்றும் வேளாண் பொறியியல் அதிகாரி ரங்கராஜன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற விவசாயிகள், தங்களது நிலங்களில் பாசனக் கட்டமைப்புகளை அமைப்பது மற்றும் மானிய உதவிகளைப் பெறுவது குறித்த சந்தேகங்களை அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்து கொண்டனர். மேலும், தங்களுக்கு விருப்பமான மற்றும் பொருத்தமான பாசனக் கருவி நிறுவனங்களை விவசாயிகளே சுயமாகத் தேர்வு செய்து, அதுகுறித்த விவரங்களை வேளாண்மைத் துறையிடம் உடனடியாகத் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us