தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இளம் நாட்டிய கலைஞர்கள் முதல்வரிடம் வாழ்த்து

இளம் நாட்டிய கலைஞர்கள் முதல்வரிடம் வாழ்த்து

இளம் நாட்டிய கலைஞர்கள் முதல்வரிடம் வாழ்த்து


UPDATED : அக் 27, 2026 08:48 PM

ADDED : அக் 27, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 08:48 PM ADDED : அக் 27, 2026 08:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மலேசியாவில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் நாட்டிய கலைஞர்கள் முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பத்து கேவ்ஸ் என்ற இடத்தில் உலகப் புகழ்பெற்ற சுப்ரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு சுப்ரமணியர் சுவாமி 140 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார்.

அக்கோவிலில் நடந்த நவராத்திரி பெருவிழாவில், சர்வதேச நாட்டிய அர்ப்பண நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில், புதுச்சேரியை சேர்ந்த அவுட்லாஸ்டர்ஸ் டான்ஸ் ஸ்கூல் நடப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் நடன குரு ஸ்டாலின் தலைமையில், இளம் நாட்டிய கலைஞர்கள் வரூன், விவேக்குமார், கமலேஷ், பாரத், இலக்கியா,மித்ரா, திவ்யாஸ்ரீ ஆகியோர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் நாட்டிய கலைஞர்கள் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us