நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: தனியார் நிறுவன டிரைவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 34. அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். ஆனந்தலட்சுமி என்ற மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில தினங்களுக்கு முன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்னையால், ஆனந்தலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இதனால், மனமுடைந்த விக்னேஷ், நேற்று முன்தினம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.