/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
/
போதை டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
ADDED : ஜன 02, 2025 11:02 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் முதன்முறையாக குடிபோதையில் கார் ஓட்டியதற்காக மதுரைச் சேர்ந்த டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால், நகரப் பகுதிகள் முழுதும் போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து கொண்டு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் தங்களது பகுதிகளுக்கு வாகனங்களின் மூலம் புறப்பட்டு செல்ல துவங்கினர்.இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வடக்கு பகுதி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் இ.சி.ஆர்., சிவாஜி சிலை அருகே தீவிர வாகன சோதனையில்ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததும்,அவர் மதுரையைச் சேர்ந்த ஆசிப் அலிஎன்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார் அவர் மீது குடிபோதையில் கார் ஓடியதாக வழக்குப் பதிந்து மொபைல்கோர்ட்டிற்கு அனுப்பி வைத்தனர். நீதிபதி குடிபோதையில் கார் ஓட்டிய ஆசிப் அலிக்கு, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார். பின், அபராத தொகையை டிரைவர் ஆசிப் அலி, செலுத்திய பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
புதுச்சேரியில் முதன்முறையாக குடிபோதையில் கார் ஓட்டியதாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்த வெளிமாநில டிரைவருக்கு, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

