ADDED : நவ 21, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மது போதையில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் மது போதையில் ஒருவர் ரகளை செய்வதாக இன்று (நவ.,21) மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று போதையில் தகராறு செய்த சண்முகாபுரத்தை சேர்ந்த நபரை கைது செய்தனர்.
அதே போன்று, டி.நகர்., போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் ஒருவரும், சேதராப்பட்டு, 1; காலாப்பட்டு, 1; தவளக்குப்பம்,1; திருபுவனை,1; திருக்கனுார், 1; காட்டேரிக்குப்பம்,1; வில்லியனுார், 1; மங்கலம்,1; கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், 1; மேலும், அரியாங்குப்பத்தில், 2; முதலியார்பேட்டையில், 2; பாகூரி,2; ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷக்குட்பட் பகுதியில், 3; என மொத்தம் 20 பேரை, அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
