ADDED : அக் 18, 2026 12:41 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு துாமாதேவி தேவி மூல மந்திர ஹோமம் நடந்தது.
புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், 6ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா, துர்கா பூஜை விழா காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் துவங்கி நடந்து வருகிறது.
நேற்று துாமாதேவி தேவி மூல மந்திர ஹோமம் நடந்தது. விழாவில் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் சுவாமி தரிசனம் செய்தார். பின் பரதநாட்டிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
