ADDED : ஜூலை 02, 2025 02:05 AM
புதுச்சேரி : புதுச்சேரி அமராபதி சுப்பராயன் அறக்கட்டளை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா, உத்தரவாகினிப்பேட்டையில் நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் தலைமை ஆசிரியர் சுப்பராயன் வரவேற்றார். விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ 10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ. 5 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 3 ஆயிரத்தை வழக்கறிஞர்கள் கோவிந்தராசு, லுாகாஸ், முன்னாள் உணவு கட்டுப்பாட்டு அதிகாரி தலையாரி, தேசிய நல்லாசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
ஆசிரியர்கள் தணிகாசலம், நிலவழகன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆதவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில், மாணவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சுப்பராயன் குடும்பத்தினர் செய்தனர்.