/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அழிந்து வரும் கோவில் காடுகளை மீட்டெடுக்க முயற்சி: புதுச்சேரியின் பசுமை பரப்பு அதிகரிக்கும்

ADDED : ஜன 02, 2025 06:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் அழியும் நிலையில் உள்ள கோவில் காடுகளை மீட்டெடுக்க தெய்வீக தன்மை வாய்ந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. புதுச்சேரியில் அழியும் நிலையில் உள்ள கோவில் காடுகளை மீட்டெடுக்க, தெய்விக தன்மை வாய்ந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
புதுச்சேரியில் எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் எல்லையில் அடர்ந்த கோவில் காடுகளில் முறுக்கிய மீசையுடன், அய்யனார், மதுரை வீரன் உள்ளிட்ட நாட்டார் தெய்வங்கள் மண்ணால் செய்த குதிரை, நாய் உள்ளிட்ட சிலைகளுடன் காவலுக்கு வீற்றிருந்து வரவேற்பதை காண முடியும்.
கனல் தெறிக்கும் பார்வையில், நாக்கு வெளியே தெரிய, விழிகள் பிதுங்கி நிற்க ஊரை காக்கும் தெய்வங்களை, குடும்பத்துடன் நம்முன்னோர்கள் ஆண்டுக்கொரு நாள் பொங்கலிட்டு வழிபட்டு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் இப்படிப்பட்ட கோவில் காடுகளில் உள்ள இடத்தில் இருந்து தான் தங்கள் முன்னோர்கள் ஊரை பாதுகாக்கின்றனர் என்ற மக்களின் நம்பிக்கையுடன் அழுத்தமாக இருந்ததால், அந்த ஊர்களின் கோவில் காடுகள் உயிர் பெற்று இருந்தன. இங்குள்ள மரங்களை வெட்டினால் தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடும் என்ற நம்பிக்கையை கோவில் காடுகளை காலம் காலமாக காப்பாற்றி வந்தது.
ஆனால், அண்மை காலமாக இந்த கோவில் காடுகள் அழிவை நோக்கி சென்றுக் கொண்டுள்ளன. புதுச்சேரியில் 108 கோவில்களில் 90.42 எக்டேர் பரப்பளவில் மட்டுமே காடுகள் உள்ளன. அதிகப்பட்சமாக நல்லவாட்டில் 3.80 எக்டேர் பரபரப்பளவு கோவில் காடு உள்ளது. ஆக்கிரமிப்பு, மரங்கள் அழிப்பு, மனை பட்டாவாக மாற்றம் என பல்வேறு காரணங்களால் கோவில் காடுகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.
இதனால் கோவில் காடுகளை மீட்டெடுக்க அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழுமம் தயாராகி வருகிறது. மாநிலத்தில் வன வளங்கள் இல்லாத நிலையில், அரசின் அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு துறை வாயிலாக அடுத்த ஐந்தாண்டுகளில் பசுமை பரப்பினை இரட்டிபாக்கும் செயல் திட்டத்தை துவங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது கோவில் காடுகள் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதன் மூலம் புத்துயிர் பெருவதோடு, பல்லுயிர் பெருக்கத்திற்கு புகலிடம் கிடைக்க உள்ளது.
'கோவில் காடுகளை பாதுகாப்பது அனைவரின் கடமை'
மாசுக்கட்டுபாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறுகையில், 'கோவில் காடுகளில் வளரும் தாவரங்கள் அந்தந்த மண்ணுக்குகேற்ற தெய்வீக தாவரங்கள். அவை பல்வேறு உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் புகலிடமாக உள்ளன.
மண்ணுக்கேற்ற அலங்கை, நாகலிங்கம், அத்தி, இலுப்பை, வேங்கை, கடம்பு, பின்னம் என தாவரங்களை தேர்வு செய்து, முதற்கட்டமாக 7 ஆயிரம் மரக்கன்றுகள் சற்று வளர்ந்த நிலையில் நட்டு, தொடர்ந்து பராமரிக்க உள்ளோம். இதன் மூலம் கோவில் காடுகள் மீட்டெடுக்கப்படும். விரைவில் இத்திட்டம் துவக்கி வைக்கப்படும்.
அந்தந்த பகுதியில் உள்ள இயற்கை பன்முக சூழலை பாதுகாப்பத்தில் கோவில் காடுகள் முக்கியமானவை. கோவில் காடுகள் வெறும் நிலம் - காடு மட்டும் கிடையாது. அதை சார்ந்த மனிதன், மரம், செடி, கொடி என அனைத்து உயிர்களின் வாழ்வியல் நம்பிக்கையாக உள்ளன.
கோவில்கள் காடுகளை ஒவ்வொன்றாக சிதைத்தால் இயற்கை சமநிலையும் சீர்குலையும். எனவே கோவில் காடுகளை காப்பாற்றுவது நமது அனைவரது கடமை' என்றார்.
புதுச்சேரி, ஜன. 2-
புதுச்சேரியில் எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் எல்லையில் அடர்ந்த கோவில் காடுகளில் முறுக்கிய மீசையுடன், அய்யனார், மதுரை வீரன் உள்ளிட்ட நாட்டார் தெய்வங்கள் மண்ணால் செய்த குதிரை, நாய் உள்ளிட்ட சிலைகளுடன் காவலுக்கு வீற்றிருந்து வரவேற்பதை காண முடியும்.
கனல் தெறிக்கும் பார்வையில், நாக்கு வெளியே தெரிய, விழிகள் பிதுங்கி நிற்க ஊரை காக்கும் தெய்வங்களை, குடும்பத்துடன் நம்முன்னோர்கள் ஆண்டுக்கொரு நாள் பொங்கலிட்டு வழிபட்டு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் இப்படிப்பட்ட கோவில் காடுகளில் உள்ள இடத்தில் இருந்து தான் தங்கள் முன்னோர்கள் ஊரை பாதுகாக்கின்றனர் என்ற மக்களின் நம்பிக்கையுடன் அழுத்தமாக இருந்ததால், அந்த ஊர்களின் கோவில் காடுகள் உயிர் பெற்று இருந்தன. இங்குள்ள மரங்களை வெட்டினால் தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடும் என்ற நம்பிக்கையை கோவில் காடுகளை காலம் காலமாக காப்பாற்றி வந்தது.
ஆனால், அண்மை காலமாக இந்த கோவில் காடுகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளன. புதுச்சேரியில் 108 கோவில்களில் 90.42 எக்டேர் பரப்பளவில் மட்டுமே காடுகள் உள்ளன. அதிகப்பட்சமாக நல்லவாட்டில் 3.80 எக்டேர் பரபரப்பளவு கோவில் காடு உள்ளது. ஆக்கிரமிப்பு, மரங்கள் அழிப்பு, மனை பட்டாவாக மாற்றம் என பல்வேறு காரணங்களால் கோவில் காடுகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.
இதனால் கோவில் காடுகளை மீட்டெடுக்க புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழுமம் தயாராகி வருகிறது. மாநிலத்தில் வன வளங்கள் இல்லாத நிலையில், அரசின் அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு துறை வாயிலாக அடுத்த ஐந்தாண்டுகளில் பசுமை பரப்பினை இரட்டிபாக்கும் செயல் திட்டத்தை துவங்கியுள்ளது.