/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் மோதி முதியவர் சாவு: போலீசார் விசாரணை
/
பஸ் மோதி முதியவர் சாவு: போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 25, 2025 08:21 AM

வில்லியனுார் : பஸ் மோதி இறந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேதராப்பட்டு மைலம் சாலையில் கடந்த 10ம் தேதி இரவு 8:45 மணியளவில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் சாலையில் நடந்து சென்றபோது பஸ் மோதி இறந்தார். அவர், வெள்ளை மற்றும் மெரூன் நிற அரைக்கை சட்டை மற்றும் சிவப்பு நிற வேட்டி அணிந்திருந்தார். அவரது உடல் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் 0413-2661246, நிலைய அதிகாரியை 9500600014 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.