ADDED : நவ 16, 2026 05:57 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கவுண்டம்பாளையம், அன்னை தெரசா வீதியை சேர்ந்தவர் முத்து, 80; குடிப்பழக்கம் உள்ளது. இவர் நேற்று (நவ.,15) இரவு வீட்டின் அருகேயுள்ள கழிவுநீர் வாய்க்காலில் போதையில் விழுந்து கிடந்தார்.
அதைகண்ட முத்துவின் மகன் முருகையன் மற்றும் உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு, முத்துவை பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
முருகையன் புகாரின் பேரில், தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
