மண்டல அறிவியல் கண்காட்சி: முதல்வர் ரங்கசாமி திறந்துவைப்பு
மண்டல அறிவியல் கண்காட்சி: முதல்வர் ரங்கசாமி திறந்துவைப்பு
UPDATED : நவ 16, 2026 07:05 PM
ADDED : நவ 16, 2026 05:57 PM

வில்லியனுார்: புதுச்சேரி கல்வித்துறை சார்பில் வில்லியனுாரில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்துவைத்து பார்வையிட்டார்.
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் 2026ம் ஆண்டிற்கான மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (நவ.,16) துவங்கியது. இதன் துவக்க விழாவிற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். முதல்வர் ரங்கசாமி கண்காட்சி அறங்கை திறந்துவைத்து பார்வையிட்டார். விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலர் கிருஷ்ணமோகன் உப்பு, இயக்குனர் மோகன்குமார், இணை இயக்குனர் சிவகாமி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மண்டல அறிவியல் கண்காட்சியில் புதுச்சேரியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. தொடக்கப் பள்ளி பிரிவில் 94 படைப்புகளும், இடைநிலைப் பள்ளி பிரிவில் 132 படைப்புகளும், உயர்நிலைப் பள்ளி பிரிவில் 117 படைப்புகளும், மேல்நிலைப் பள்ளி பிரிவில் 67 படைப்புகளும், ஆசிரியர் பிரிவில் 18 படைப்புகள் என மொத்தம் 428 அறிவியல் படைப்புகள் காட்சியில் இடம்பெற்றது.
இந்த கண்காட்சி நவம்பர் நாளை மறுநாள் (18ம் தேதி) வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, வரும் 19ம் தேதி நடக்க உள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெறும். கண்காட்சியை காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையில் மாணவர்களும், மாலை 4:00 மணிக்கு மேல் பொதுமக்கள் பார்வையிடலாம். மாலை 5:00 மணிக்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மோகன்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
