தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனியார் சுற்றுலா கப்பலுக்கு மீனவ பஞ்சாயத்தார் எதிர்ப்பு

தனியார் சுற்றுலா கப்பலுக்கு மீனவ பஞ்சாயத்தார் எதிர்ப்பு

தனியார் சுற்றுலா கப்பலுக்கு மீனவ பஞ்சாயத்தார் எதிர்ப்பு


UPDATED : நவ 16, 2026 05:56 PM

ADDED : நவ 16, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 05:56 PM ADDED : நவ 16, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தனியார் சுற்றுலா கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம பஞ்சாயத்து மற்றும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக துறைமுக இயக்குனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி துறைமுகத்திலிருந்து குஜராத்தை சேர்ந்த தனியார் சுற்றுலா கப்பல், கடலுக்குள் 5 கி.மீட்டர் வரை சென்று திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சுற்றுலா கப்பல் வரும் 20ம் தேதி முதல் பயணத்தையும் துவங்க உள்ளது. இதற்கு, வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம பஞ்சாயத்து, வாட்டர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், துறைமுகத்துறை இயக்குனர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், 40க்கும் மேற்பட்ட படகு மற்றும் சுற்றுலா நிறுவனங்கள், உரிய அரசு அனுமதிகளுடன் சுற்றுலா படகு தொழிலை செய்து வருகிறோம். இந்நிலையில், 150 முதல் 200 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய தனியார் சுற்றுலாக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்படுவது, ஏற்கனவே இத்தொழிலை நம்பி வாழும் உள்ளூர் மீனவர்கள், படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் 100க்கம் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆகையால், தனியார் சுற்றுலா கப்பலுக்கு வழங்குப்பட்டுள்ள அனுமதியை மறுபரிசீலனை செய்து, அதன் வணிக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. எதிர்காலத்தில் புதிய அனுமதிகள் வழங்குவதற்கு முன்பு உள்ளூர் மீனவ கிராம பஞ்சாயத்து மற்றும் சங்கங்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். உள்ளூர் மீனவ மக்களின் சுற்றுலா மற்றும் படகு தொழிலை அரசு ஊக்குவித்து பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us