ADDED : அக் 17, 2026 02:27 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், அம்பகரத்துார் வேடன்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 78. இவர் நேற்று முன்தினம் அதிகாலை அம்பகரத்துார் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடைக்குச் சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிந்தார்.
அப்போது அவருக்குப் பின்னால் வந்த மாருதி கார் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த பன்னீர்செல்வம் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து, போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
