ADDED : பிப் 01, 2026 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, திலகர் நகர், 3வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் குமரவேலு மனைவி வீரம்மாள், 66. கணவர் இறந்து விட்டதால், பெரிய மகள் பராமரிப்பில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் எல்லைபிள்ளைச்சாவடி 100 அடி ரோட்டில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். வங்கி எதிரே சாலையை கடக்க முயன்றபோது, முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுாரை சேர்ந்த வெங்கடேஷ்வரன், 29; என்பவர் ஓட்டி வந்த கார் (பி.ஓய்.01 பி.டபிள்யூ. 0234) வீரம்மாள் மீது மோதியது.படுகாயமடைந்த வீரம்மாள் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

