நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லோக்சபா தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பல கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழு, சோதனைச் சாவடி பணியாளர்களுக்கு லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைகளையும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

