தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் நடைமுறையில் மாற்றம் தேவை; மா.கம்யூ., வலியுறுத்தல்

 தேர்தல் நடைமுறையில் மாற்றம் தேவை; மா.கம்யூ., வலியுறுத்தல்

 தேர்தல் நடைமுறையில் மாற்றம் தேவை; மா.கம்யூ., வலியுறுத்தல்


ADDED : ஏப் 11, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 10:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேர்தல் நடைமுறையில் மாற்றங்கள் தேவை என, மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.

மா.கம்யூ., அறிக்கை;

புதுச்சேரியில் 89 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல், ஓட்டுப்பதிவு அனைத்தும் அறிவிக்கப்பட்டது. உடனேயே தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை நடத்தை விதிகளைக் கடைபிடிக்க எல்லைகளிலும், தெரு முனைகளிலும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியது.

மருத்துவ சிகிச்சை, அவசர குடும்பத் தேவைகள் ஆகியவற்றிற்கு பணம் எடுத்துச் சென்ற பொதுமக்களை அவதிக்குள்ளாக்கினர். இருப்பினும், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நாள், ஓட்டுப்பதிவு நாள் மற்றும் முதல் நாளிலும் பணபட்டுவாடா அனைத்துத் தொகுதிகளிலும் நடந்ததை மக்கள் அறிவர்.

தேர்தல் நடைமுறையில் தீவிர மாற்றங்கள் தேவை என்று மா. கம்யூ., தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விகிதாசார பிரதிநிதித்துவம் தேர்தலில் பணம் பட்டுவாடாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும். அதை நோக்கி இந்திய ஜனநாயக சமூகம் பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us