தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்சார ஆட்டோக்களுக்கு போதிய சார்ஜிங் வசதி தேவை

மின்சார ஆட்டோக்களுக்கு போதிய சார்ஜிங் வசதி தேவை

மின்சார ஆட்டோக்களுக்கு போதிய சார்ஜிங் வசதி தேவை


UPDATED : நவ 29, 2026 09:00 PM

ADDED : நவ 29, 2026 09:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 09:00 PM ADDED : நவ 29, 2026 09:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இயக்கப்படும் மின்சார ஆட்டோக்களுக்கு போதிய சார்ஜிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரி நகராட்சி சார்பில், பொதுமக்கள் குறைந்த விலையில் ஆட்டோவில் பயணிக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் நம்ம ஊர் டாக்சி ஆப் மூலம் மின் சார ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

மொத்தம் 38 மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்ட நிலையில், வருமானம் குறைவு காரணமாக தற்போது 15 ஆட்டோக்கள் மட்டுமே பகுதி நேரமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகையில் ‘லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ஆப் மூலம் புக் செய்கின்றனர். அப்போது, ஆட்டோ வரும் நேரங்கள் குறித்து பயணிகள் கேட்கும் போது, 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும் என, தெரிவித்தால் உடனடியாக புக்கிங்கை ரத்து செய்கின்றனர்.

அதே போல் வெளி இடங்களில் ஆட்டோவை நிறுத்தினால், ஸ்டாண்டில் உள்ளவர்கள் தகராறு செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல், பல இடங்களில் சார்ஜிங் பாயின்ட்கள் இல்லை. துறைமுகம் மற்றும் பாண்டி மெரினா பகுதியில் உள்ள இ–ரிக் ஷா ஸ்டாண்டில் மட்டுமே சார்ஜ் செய்யும் நிலை உள்ளது.

ஆப் மூலம் புக்கிங் மூலம் வரும் வருமானம் குறைவாக உள்ளதால், லாபம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை மீண்டும் சர்வீஸ் செய்து இயக்க போதி நிதி இல்லை.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை சீரமைத்து இயக்கவும், பாதுகாப்பு மற்றும் சார்ஜிங் வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us