/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் வாய்க்கால் நடுவில் மின் கம்பம் பொதுப்பணித்துறை அசத்தல்
/
கழிவுநீர் வாய்க்கால் நடுவில் மின் கம்பம் பொதுப்பணித்துறை அசத்தல்
கழிவுநீர் வாய்க்கால் நடுவில் மின் கம்பம் பொதுப்பணித்துறை அசத்தல்
கழிவுநீர் வாய்க்கால் நடுவில் மின் கம்பம் பொதுப்பணித்துறை அசத்தல்
ADDED : நவ 04, 2024 05:59 AM

வில்லியனுார் : வில்லியனுார் பகுதியில் பொதுப்பணித்துறையினர் மின் கம்பத்தை நடுவில் வைத்து கழிவுநீர் வாய்க்கால்அமைத்துள்ளனர்.
புதுச்சேரி, பொதுப்பணித்துறை சாலை மற்றும் கட்டடங்கள் தெற்கு கோட்டம் சார்பில் வில்லியனுார் - பாகூர் மெயின்ரோடு உறுவையாறு முதல் சங்கராபரணி ஆற்றங்கரை வரை கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
உறுவையாறுஜெயம் நகர் பகுதியில் சாலையோரம் உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் உள்ளே வைத்து கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை செய்து முடித்துள்ளனர்.
இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு கழிவுநீர் வாய்க்கால் பகுதியில் உள்ள மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.