தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்னணு கழிவு சேகரிப்பு முகாம்

மின்னணு கழிவு சேகரிப்பு முகாம்

மின்னணு கழிவு சேகரிப்பு முகாம்


ADDED : நவ 04, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ராகவேந்திரா நகரில் மின்னணுக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மின்னணுக் கழிவு சேகரிப்பு முகாம் நாளை வரை நடக்கிறது.

இதுகுறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டுக் குழுமம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் பிளானட் சேவர்ஸ் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மின்னணுக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராகவேந்திரா நகரில் நேற்று முதல் நாளை (6ம் தேதி) வரை மின்னணுக் கழிவு சேகரிப்பு முகாம் நடக்கிறது.

தற்போதைய வாழ்க்கை முறையில் மின் மற்றும் மின்னணுச் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பழுதடைந்த மற்றும் பயன்படுத்தப்படாமல் வீடுகளில் தேங்கி கிடக்கும் மின்னணுச் சாதனங்களை முறையற்ற வகையில் குப்பைகளுடன் சேர்த்து கொட்டுவது சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, இத்தகைய கழிவுகளில் காணப்படும் அபாயகரமான நச்சு வேதிப்பொருட்களான ஈயம், பாதரசம், காட்மியம், பெரிலியம் ஆகியவை நீர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாசுபடுத்தும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய மற்றும் பழுதடைந்த மின்சாதனங்கள், மின்னணுச் சாதனங்கள் மற்றும் பிற மின்னணுக் கழிவுகளை பொதுக் குப்பைகளுடன் சேர்த்து கொட்டாமல், இச்சேகரிப்பு முகாமில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இதன் மூலம் மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து, அறிவியல் அடிப்படையில் மறுசுழற்சி செய்வதற்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை வழங்கலாம்.

ஆகையால், ராகவேந்திரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் முகாமில், தங்களது வீடுகளில் உள்ள தேவையற்ற மின்னணுக் கழிவுகளை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us