/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை மாதர் சம்மேளன் வலியுறுத்தல்
/
பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை மாதர் சம்மேளன் வலியுறுத்தல்
பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை மாதர் சம்மேளன் வலியுறுத்தல்
பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை மாதர் சம்மேளன் வலியுறுத்தல்
ADDED : பிப் 18, 2025 06:36 AM
பாகூர்: பாலியல் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிக்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளம் வலியுறுத்தி உள்ளது.
சம்மேளனம் மாநில செயலாளர் அமுதா விடுத் துள்ள அறிக்கை;
தவளக்குப்பம் தனியார் பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு, அப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டும் காணாமல் இருக்கும் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் உண்மை அறியும் குழு, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறி உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்.-, பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில், பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்து, அதில் பெண்கள் அமைப்புகளிலிருந்து ஒருவர் நியமிக்க வேண்டும். போக்சோ வழக்கில் கைதாகும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றியதுபோல் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற மசோதாவை, புதுச்சேரி சட்டசபையிலும் நிறைவேற்றவேண்டும். இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

