/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஜி., மாணவரின் ஸ்கூட்டர் திருட்டு
/
இன்ஜி., மாணவரின் ஸ்கூட்டர் திருட்டு
ADDED : ஆக 20, 2025 07:00 AM
புதுச்சேரி : இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரின் ஸ்கூட்டரை திருடி சென்ற நபரை,போலீசார் தேடி வருகின்றனர்.
கொசப்பாளையம் டி.ஆர்., நகரை சேர்ந்த வேல்முருகன் மகன் குருமூர்த்தி, 19; தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
மறைமலை அடிகள் சாலை துணிக்கடை வெளியில் உள்ள காபி கடையில் பகுதிநேர வேலை செய்து வருகிறார்.
அவர் வேலை செய்யும் கடைக்கு அருகில், கடந்த 11ம் தேதி தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சென்றார். வேலையை முடித்து விட்டு வந்து பார்க்கும் போது, ஸ்கூட்டர் காணாமல் போயிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ஸ்கூட்டரை திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

